News
தளபதி 68யில் விஜய்-க்கு வில்லனாக அமீர்கான்?

லியோ படத்தை அடுத்து இயக்குநர் வெங்கபிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விஜய்யின் 68-வது படமாகும்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் அமீர்கானிடம் சந்தித்து பேசி வருகிறார்கள்.
விஜய் நடிக்கும் 68-வது படம் அல்லது ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாகவே அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
தளபதி 68 படத்தில் நடிக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான் இதில் நடிக்க சம்மதிப்பாரா இல்லையா என மிக விரைவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.