Connect with us
 

News

கே.ஜி.எஃப் படத்துடன் மோதும் அமிர்கானின் லால் சிங் சத்தா !

Published

on

அமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சிங் சத்தா’ அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

கன்னட மொழியில் உருவாகி தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்தான் இப்படத்துடன் போட்டியிடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

அமிர்கான் புரெக்‌ஷன் மற்றும் கிரன் ராவ் தயாரிப்பில் அத்வைத் சந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.