News
ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி !

ஜெயம் ரவி – மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனாலும் இது ஒரு வதந்தி என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் விவாகரத்து பெற்று வருகின்றனர். இப்படி இருக்க ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இருவருமே எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஜெயம் ரவியின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கி உள்ளார்.
இதனால் இருவரும் விவாகரத்து செய்வது உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்கள். இருந்தாலும் இது குறித்து ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரில் ஒருவர் விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும் எனவும் சில ரசிகர்கள் தெரிவிட்டுள்ளனர்.