Connect with us
 

News

சமுத்திரக்கனிக்கு தெலுங்கில் குவியும் வில்லன் பட வாய்ப்புகள் !

Published

on

நாடோடிகள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார் சமுத்திரக்கனி அதனை தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமுத்திரக்கனி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. கமல் ஹாசனுடன் இந்தியன்2, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயன் படமான டான் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ள சமுத்திரக்கனிக்கு தற்போது அங்கு வில்லன் பட வாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த அல வைகுந்தபுரம்லூ, கிராக் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக மாறியுள்ளார்.

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகும் ஆர்.ஆர்.ஆர். படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் மகேஷ்பாபு நடிக்கும் சர்காரு வாரி பாட்டா மற்றும் தேஜா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த திரைப்படங்களை தவிர மேலும் வேறு இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.