News
ரசிகர்கள் நாணயம் போன்றவர்கள் – அஜித் குமார் !

அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரில் இவரும் ஒருவராக தற்போது வலம் வருகிறார். தன் திரையுல பயணத்தின் 29 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 30 ஆண்டில் காலெடி எடுத்து வைக்கிறார்.
இதனை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது 30-வது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் காலெடி எடுத்து வைக்கும் அஜித் தனது ரசிகர்களுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை இவரின் மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில் அஜித் குமார் கூறியுள்ளதாவது:- ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலைகள் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள்.ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.வாழ & வாழ விடு நிபந்தனையற்ற அன்பு எப்போதும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.