Connect with us
 

News

நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார் !

Published

on

நடிகர் மற்றும் திரைப்பட விமர்சர்கருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்து வந்த வெங்கட் சுபா. ஒரு யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தார்.

இவரின் மறைவுக்கு பல திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தயாரிப்பாளார் டி.சிவா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் என் நண்பன் சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் வெங்கட் 12.48 அதிகாலை இறைவனடி சேந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மனோபாலா, பிரகாஷ்ராஜ், இந்துஜா, தனஞ்செயன், விஜய் மில்டன், அறிவழகன், ராதிகா என பல திரைப்பிரபலங்கள் வெங்கட் சுபா மறைவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading