News
தயாரிப்பாளர் ஜே சதீஷ் மீது நடிகர் பாலாஜி முருகதாஸ் காட்டம் !

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.
இவர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகி வரும் பயர் என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பாலாஜியுடன் காயத்ரி ஷான், சாஷி அகர்வால், ரச்சிதா, மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று எக்ஸ் தளத்தில் பாலாஜி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில் ‘ ஜே.சதீஷ்குமார் எனக்கு ஒரு பைசா கூட இதுவரையில் தரவில்லை என கெட்டவார்த்தையுடன் சேர்ந்து பதிவிட்டுள்ளார். அப்படத்திற்கு நான் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
தேசிய விருது வென்ற படத்தின் தயாரிப்பாளர் இப்படி சம்பளமே கொடுக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.