News

காதலி மோனிகாவை கரம்பிடித்தார் நடிகர் கவின் !

Published

on

தன் நீண்ட நாள் காதலியான மோனிகாவை கரம் பிடித்தார் கவின். இவர்கள் இருவரின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய் டீவி தொலைக்காட்சியில் தன் பயணத்தை ஆரம்பித்து கவின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சத்ரியன் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து 2019-ஆம் நடைபெற்ற பில்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலியே வெளியேறினாலும் ரசிகர்கள் மத்தியிலும் மேலும் இரு மடங்கு பிரபலமானார். அதனை தொடர்ந்து நட்புனா என்னானு தெரியுமா, லிஃப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக டாடா திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு வரவேற்பையும் நல்ல வசூலையும் அள்ளிக்கொடுத்தது.

இந்த நிலையில்தான் தன் நீண்ட நாள் காதலியான மோனிகாவுடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். கவின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Trending

Exit mobile version