News

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ளும் நடிகர் கவின் !

Published

on

பிக்பாஸ் புகழ் கவின் டாடா படம் திரைப்படம் மூலம் அனைத்து விதமான ரசிகர்களின் கவனத்தை தன் வசம் ஈர்த்த நடிகர். தன் நீண்ட நாள் காதலியான மோனிகாவை ஆகஸ்ட் 20-ம் தேதி கரம்பிடிக்கிறார்.

கவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நெடுந்தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து வெளியான சத்ரியன், நட்புனா என்னான்னு தெரியுமா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியான லிஃப்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான டாடா படத்தின் மூலம் கிடைத்த வெற்றி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்த நிலையில் தனியார் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வருகிற 20-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கவின் தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version