Connect with us
 

News

தளபதி விஜய்யை இயக்க ஆசைப்படும் நடிகர் பார்த்திபன் !

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ரா.பார்த்திபன். இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படத்தை நம் தமிழ் சினிமா கொண்டாடவில்லை ஆனால் மிகச்சிறந்த ஒரு சாதனை படம் என்றே சொல்லவேண்டும்.

விகடன் விருது வழங்கும் விழாவில் மொக்கை படத்துக்கெல்லாம் விருது வழங்கினர். ஒத்த செருப்பு படத்துக்கு வழங்கவில்லை என்ற ஆதங்கத்தில் மேடையில் பார்த்திபன் பேசியது அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கும்.

இந்த ஒத்த செருப்பு படத்தை தமிழ் சினிமா கொண்டாவில்லை யார் கண்ணுக்கும் சரி கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இப்படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது எனக்கு தளபதி விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அதுவும் மிக விரைவில் நடக்கும் என்றும் கூறியுள்ளார் பார்த்திபன். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.