News
லியோ படத்தில் இணைந்த நடிகர் ராமகிருஷ்ணா !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. விஜய்யுடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் இயக்குநர் நடிகருமான ராமகிருஷ்ணன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமகிருஷ்ணா போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இதை தவிர சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.