News

சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைத்த சூர்யா !

Published

on

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறான் இயக்குநர் சிவா அதே போல பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆனால் வெற்றிமாறன் இயக்கிவரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடியவில்லை அதனால் வாடிவாசல் படம் ஆரம்பிக்க சற்று தாமதமாகும் என்ற காரணத்தால் அதற்கும் வேறு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.

இந்த கூட்டணி அடுத்த மாதமே ஆரம்ப்பிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்திற்காக செட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார் சிவா ஆனால் திடீரென ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் சூர்யாவிடம் விசயத்தை சொல்லி சூர்யாவின் அனுமதி பெற்றுதான் ரஜினியின் படத்தை இயக்கச் சென்றார் சிறுத்தை சிவா. அண்ணாத்த படம் முடிந்த கையோடு நாம் கண்டிப்பாக இணைவோம் என்று கூறியிருந்தார் அதே போல தற்போது இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள்.

Trending

Exit mobile version