News

சூரரை போற்று படத்தை தயாரிக்கும் சூர்யா !

Published

on

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று கடந்த வருடம் இப்படம் வெளியானது. இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, வெங்கட் காளி, ஊர்வசி என பலர் நடித்திருந்தனர்.

விமான நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவானது இப்படம். தற்போது சூரரை போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் சூர்யா நடித்த கதாபத்திரத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா அவர்களே இயக்கவுள்ளாராம்.இப்படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் சூர்யா இது பற்றி சூர்யா கூறும் போது.

சூரரை போற்று திரைப்படத்துக்கு கிடத்த அன்பும் பாராட்டும் இதுவரை நான் பார்த்திராத ஒன்று. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்ட நொடியிலிருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். காரணம் படத்தின் ஆத்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் அபண்டன்ஷியா என்டெர்ய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தை தருகிறது.

Trending

Exit mobile version