Connect with us
 

News

பிக்பாஸ் லாஸ்ஸியாவுக்கு சூர்யா செய்த உதவி !

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் செல்ல பிள்ளை என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் லிங்கா. அதன் பின்னர் கன்னட ஸ்டார் நான் ஈ புகழ் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி மற்றும் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்ஹா, ரூலர் போன்ற தெலுங்கு படங்களை மட்டுமே இயக்கி வந்தார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அதிக படக்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை சபர் -சரவணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகிறார்கள். இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை நடிகர் சூர்யா மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.