News

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தளபதி விஜய் !

Published

on

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிக அதிகமாக பரவியதால் பல சினிமா துறை சார்ந்தவர்கள் உயிரிலந்தனர். அதோடு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் நடிகர் நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டு அதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில் ரஜினிகாந்த், நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, சூரி, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நடிகர் நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த புகைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version