Connect with us
 

News

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தளபதி விஜய் !

Published

on

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மக்களின் மனதில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு நடிகர் இதையெல்லாம் தாண்டி நல்ல மனிதர். கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார் இவருக்கு வயது 46.

அவரது உடலுக்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று தளபதி விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.