Connect with us
 

News

கே.ஜி.எப் நடிகர் திடீர் மரணம் அதிர்ச்சியில் நடிகர்கள் !

Published

on

சமீபத்தில் நடிகர் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப்2 படத்தில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். இவர் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மேலும் இந்தி, மலையாளம் போன்ற 100க்கும் மேற்பட்ட பிற மொழிப்படங்களிலும் இவரது நடித்துள்ளார். இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மோகன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி துரதிருஷ்டவசமாக அவர் காலமானார். அவரது திடீர் மறைவு காரணமாக கன்னட திரையுலகமே அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலகங்கள் மற்றும் ரசிகர் பட்டாளம் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை மோகன் ஜுனேஜாவின் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இவர் வடாரா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.