Connect with us
 

News

சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகை அதிதி ஷங்கர் !

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் மட்டுமே. இவரின் இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை முடித்து விட்டு சினிமாவில் கதா நாயகியாக நடித்து வருகிறார். தனது முதல் படமான விருமன் படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

இந்த நிலையில் முதல் படம் வெளியாக முன்னரே அதிதிக்கு இரண்டாவது படம் கிடைத்துள்ளாது. அதுவும் நடிகர் சிலம்பரசனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.