Connect with us
 

News

கதாநாயகியாக அறிமுகமாகும் அனிகா !

Published

on

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் அனிகா. இவர் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி அஜித்குமார் மற்றும் திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தார். அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்குமாரின் மகளாக நடித்திருந்தார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையாக வெளியான குயின் வெப் தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இப்போது பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள அனிகா தனது சமூக வலைத்தளங்களில் தனது புதிய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு அதன் மூலம் கதாநாயகி வாய்ப்பு எதும் கிடைக்குமா என்று தேடி வந்தார்.

இந்த நிலையில் அனிகா தெலுங்கு படமென்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் ஶ்ரீநாத் பாசி, ரோஷன் மேத்தியூ மற்றும் அன்னா பென் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கப்பேலோ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க அனிகா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்தும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ் படத்தில் கதா நாயகியாக நடிக்க முயற்சிகள் செய்து வருகிறார் அனிகா.

Continue Reading