News

நெற்றிக்கண் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா !

Published

on

அவள் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். நயன்தாரா நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உள்ள ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் ரீமேக் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் அனுஷ்கா நடிப்பாரா என்பதி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

அனுஷ்கா இறுதியாக மாதவனுடன் சைலன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்படமும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version