News
பீஸ்ட் படத்தில் அறிமுகமாகும் டிக்டாக் அபர்ணா தாஸ் கடந்து வந்த பாதை !

விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணாதாஸ் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் மிக முக்கியமாக ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சென்னையிலுள்ள பூந்தமல்லி அருகே படப்பிடி நடந்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது இதில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். தற்போது விஜய் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் படங்களில் தொடர்ந்து புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த பட்டியலில் புதிய வரவாக அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். இவர் எம்.பி.ஏ.பட்டதாரி டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு அதில் மிகவும் பிரமபமானார் அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான அந்திக்காடு என்ற படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து மனோகரம் என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் பீஸ்ட் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் பீஸ்ட் படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், மலையாள நடிகர் ஷன் டாம் சாக்கோ ஆகியோரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.