News
தெலுங்கு பட உலகில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் !

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பின்னர் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்தார்.
தமிழ் படங்களை தவிர தெலுக்கு படங்களிலும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா மேனன் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரசாந்த் ரெட்டி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கதா நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் இதனை தொடர்ந்து மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நிகில் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கேரி என்பவர் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களை தவிர மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.