English
பெயரை மாற்றிய நடிகை ஜனனி குவியும் பாராட்டுக்கள் !

பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகை ஜனனி. அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். இவரை கண்ணழகி என்று செல்லமாக அழைப்பார்கள். தற்போதும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார்.
நடிக்க வந்த காலத்திலிருந்து ஜனனி ஐயர் என்றுதான் குறிப்பிட்டு வந்தார். அவரின் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதே பெயரையே குறிப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் என குறிப்பிட்டு சமூக வளைத்தளங்களில் தனது பெயரின் பின்னால் இருந்த ஜாதி பெயரான ஐயர் என்றதை நீக்கி விட்டார் நடிகை ஜனனி.
இந்த மாற்றத்துக்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்கம் சொல்லவில்லை.