News
சலார் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஜோதிகாவின் விளக்கம் !

கே.ஜி.எப் படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்த படமாக பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
பிரபாஸுக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் மது குருசாமி நடிக்கிறார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகா இப்படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை நடிகை ஜோதிகா முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பதாக சொல்லப்பட்ட கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.