News
சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் காஜல் அகர்வால் !

இந்தியன் – 2, ஆச்சார்யா, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கும் பின்னரும் பல புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் தயாராகி வரும் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து ரவுடி பேபி என்ற படத்திலும் நடிக்கிறார். ராஜா சரவணன் இயக்கும் இப்படத்தில் சத்யராஜ், லட்சுமிராய், ரம்யா கிருஷ்ணன் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்கவிருக்கின்றார். ரவுடி பேபியான அந்த குழந்தையும் காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாம்.
அந்த வகையில் இமைக்கா நொடிகளில் நயன்தாரா பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா ஆகியோர் இது போன்று சிறுமிக்கு அம்மாவாக நடித்திருந்தனர். அந்த வகையில் தற்போது காஜல் அகர்வாலும் நடிக்கவிருக்கிறார்.