News

வேதாளம் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

அஜித்குமார் நடித்த வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அஜித் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேசிடம் பேசி உள்ளனர் படக்குழு.

வேதாளம் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லட்சுமிமேனனும் நடித்திருந்தனர். தெலுங்கில் லட்சுமி மேனன் நடித்த அந்த கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் மெஹிர் ரமேஷ் என்பவர் தெலுங்கில் இயக்கி வருகிறார். படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளன. கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிகாகிதம் என்ற படத்திலும் மலையாளத்தில் அரபிக்கலண்டே சிம்ஹம், வாசி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Trending

Exit mobile version