News
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி ஷெட்டி !

நடிகை Krithi Shetty தெலுங்கில் வெளியான உப்பெனா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41-வது படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.