News

தந்தை ஆசையை நிறைவேற்றுவாரா நயன்தாரா?

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்று திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விக்கி – நயன் ஜோடி தற்போது அடிக்கடி தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சிக்கு பயணிப்பது ஏன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா பெற்றோர் தற்போது கொச்சில்தான் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நயன்தாரா அப்பா குரியனுகு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவரை காண்பதற்காக அடிக்கடி நயன்தாரா பயணம் மேற்கொண்டு வருகிறார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.

மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் அப்பா குரியனுக்கு தனது செல்ல மகளன நயன்தாராவின் திருமணத்தை தான் சுய நினவுடன் இருக்கும்போதே பார்த்துவிட வேண்டும் என்பதி மிகப்பெரிய ஆசை என்கிற தகவலையும் தெரிவித்துள்ளார்.

தன்னை காண வரும் ஒன்ன்வொரு முறையும் நயனிடம் திருமண கோரிக்கையை வலியுறுத்த தவறுவதேயில்லையாம். அப்பா குரியனின் ஆசையை நயன்தாரா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version