News
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை மாளவிகா மோகனன் !

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகை மாளவிகா மோகனன்.
அப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாகவும் தற்போது வலம் வருகிறார். தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் உருவாகிவரும் யுத்ரா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இதில் நாயகனாக சித்தார்த் சதுர்வேதி நடித்து வருகிறார். அதிரடி சண்டை திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் மாளவிகா மோகனுக்கு சண்டைக்காட்சிகளும் உள்ளதாம்.
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்று மும்மையில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கினர். அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.