News
விக்ரமுக்கு ஜோடியாகும் நடிகை மாளவிகா மோகனன் !

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இன்று நடைபெறவுள்ளது. மேலும் 3டி தொழிநுட்பத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.