News

அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேசிய மீனா !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கல் நடித்தில் 1984-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். அப்படத்தில் சிறு குழந்தை வேடத்தில் நடித்தவர் நடிகை மீனா அதன் பின்னர் 1993-ம் ஆண்டு வெளியான எஜமான் படத்தில் ரஜினிகாந்துடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார். அதனை தொடர்ந்து வீரா, முத்து, குசேலன் போன்ற படங்களில் நடித்தார்.

மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மேலும் 3 கதா நாயகிகளில் நடித்துள்ளனர்.

ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளாரா என்று கூறப்பட்டாலும் உறிதியாக தெரியவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் கடந்த வாரம் டப்பிங் பணிகளை முழுவதுமாக முடித்த நிலையில் தற்போது மீனா இவரின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

அவர் டப்பிங் தியேட்டரில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். தற்போது அந்த புகைப்படம் வைராகி வருகிறது. அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளி திருநாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending

Exit mobile version