Connect with us
 

News

புதிய BMW கார் வாங்கிய நடிகை ரம்யா பாண்டியன் !

Published

on

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் ஜோக்கர்.

அதனை தொடர்ந்து ஆண்தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிலும் இவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்தது குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் புதிதாக ஒரு BMW சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த புதிய காருடன் இவர் நிற்கும் படத்தை தனவரு சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இடும்புக்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் நடிகரும் தயாரிப்பாளரருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.