Connect with us
 

News

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் நடிகை ரித்திகா சிங் !

Published

on

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார். தற்போது முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் கோடியில் ஒருவர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் விரைவில் வெளியாவிருக்கிறது.

இதனையடுத்து விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.