News
2 கோடி ரசிகர்களை பெற்ற நடிகை சமந்தா !

இந்தியாவை சேர்ந்த நடிகைகள் பலர் இன்ஸ்டாகிராமில் நால்தோறும் தங்கள் போட்டோக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காரணம் பாலோயர்களை அதிகமாகப் பெறுவதன் மூலம் கிடைக்கும் விளம்பரங்களினால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.
தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா மந்தன்னா 24.8 மில்லியன் பாலோயர்களை பெற்று முதலிடத்திலும் 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். தற்போது சமந்தா 20 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். அதாவது 2 கோடி பாலோயர்களை பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த மாதம் நடிகர் நாகசைத்தன்யாவுடன் விவாகரத்து ஆனதுடன் சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களில் அதிகமாக ஆரம்பித்துள்ளனர் என்பதே உண்மையாகும்.