News
மீண்டும் படப்பிடிப்பில் நடிகை சமந்தா !

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் குணமாக சில காலம் ஆகும் என தெரிவித்தார் சமந்தா.
இந்த நிலையில் வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். சமந்தா இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிகிச்சை முடிந்து இந்த சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதை படக்குழு உறுதி செய்துள்ளது.