News
போலீஸ் அதிகாரியாக த்ரிஷா நடிக்கும் வெப் தொடர் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடியாக வலம் வருபவர் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்னர் இவரின் மார்கெட் மேலும் பல மடங்கு உயர்ந்தது. தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது Brinda என்ற தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். போலீஸ் கதை களத்தில் உருவாகும் இந்த தொடதில் இந்திரஜித் சுகுமாரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விரைவில் இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு டிரைலர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்தது.