News

கன்னட சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் ஜோடி சேரும் திரிஷா !

Published

on

நடிகை திரிஷா சினிமா உலகில் 10 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்போதும் முன்னணி நடிகையாகயுள்ளார். தற்போது இவர் கைவசம் 5 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிப்பில் உருவாகிவரும் த்வெட்யா என்ற திரைப்படத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பவன் குமார் இயக்கும் இப்படத்தில் இப்படத்தில்தான் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும். கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

திரிஷா இதற்கு முன்பாக புனித் ராஜ்குமாருக்கு பவர் என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் அப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version