News

இயக்குனரை திடீர் திருமணம் செய்த இன்னுமொரு நடிகை !

Published

on

தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வரும் நடிகை யாமி கவுதம், தமிழில் கவுரம் மற்றும் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்தவர். தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். யாரும் எதிர் பாராத விதமாக இவருக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்தது.

இந்தியில் யூரி – சர்ஜிக்கல் ஸ்டிரக் என்ற சூப்பர் ஹிட் அடித்த படத்தை இயக்கியவர் ஆதித்யா தர்தர் இவரிதான் யாமி கவுதம் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளாக காதலாக மாறியது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.

இது பற்றி யாமி கவுதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்:- இரு குடும்பத்தினரின் ஆரிவாதத்தோடு நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும், சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வாழ்த்தும் எங்களுக்கு தேவை என்று பதிவிட்டுள்ளார்.

எங்கள் சினி டைம்ஸ் சார்ப்பிலும் ஒரு வாழ்த்தை கூறி வைப்போம் பல்லாண்டு வாழ்க சந்தோசமாக இருவரும்.

Trending

Exit mobile version