News

புரட்சிகர இளைஞனாக அதர்வா முரளி !

Published

on

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லரவராயன் படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் இராஜமோகன் அட்ரஸ் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். இதில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக பூஜா ஐவேரி நடிக்கிறார் இவர்களுடன் இசக்கி பரத், புதுமுகம் திவ்யா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாகிவரும் இப்படத்தை இயக்கிவரும் இயக்குநர் இராஜமோகன் கூறுகையில்:-

இந்த நாட்டில் அட்ரஸ் இல்லாத ஒரு ஊர் ஆமாம் 1955-ல் மொழிவாதி மாநிலமாக பிரிக்கிறபோது தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தனது முகவரியை தொலைத்த கிராமத்துக்கு முகவரி கிடைத்ததா இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

இதில் ஒரு புரட்சிகரமான காளி என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த வேடத்தில் அதர்வா முரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். உண்மை சம்பவத்தில் முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடித்துக்கொடுத்தார் அதர்வா முரளி.

இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும் இரண்டு சண்டைக்காட்சியும் புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கேரக்ட இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்கிறார்.

Trending

Exit mobile version