News
17 வருடங்களுக்கு பின்னர் கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் !

தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ரசிகர்களின் வாழ்க்கையில் என்றும் அழியாத ஒரு திரைப்படம் என்றால் கண்டிப்பாக கில்லி படத்தை சொல்லி விடலாம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம். 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தரணி இயக்கிவிருந்தார் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பலர் நடித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா கோர தாண்டவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் கடுமையாக தாக்கியது. இதனால் அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் விஜய்யின் கில்லி திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யுள்ளனர். இதை அங்குள்ள கேரள விஜய் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட திரைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.