Connect with us
 

Uncategorized

31 வருடங்களுக்கு பின்னர் இணையும் ரஜினி – அரவிந்தசாமி !

Published

on

Rajini தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார், விநாயகன், ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு என பலர் இப்படத்தில் உள்ளனர்.

இப்படம் Rajini-யின் 169-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து இவரது 170 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும் இதில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்தசாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தில் Rajini மற்றும் அரவிந்த சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.