News
6 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இயக்குநராக ஐஸ்வர்யா தனுஷ் !

ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை என்ற படங்களை இயக்கியுள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படத்தில்தான் ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தார். அதில் இடம் பெற்ற வை திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கும் பிரபலமானது.
அப்படத்தை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வைராஜா வை என்ற படம் வெளியானது அப்படம் தோல்வியை சந்தித்தது அதன் பின்னர் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை ஐஸ்வர்யா தனுஷ்.
இந்தநிலையில் தற்போது 6 வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் திகில் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளதாம்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப்படம் உருவாகயுள்ளதாம். இதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் விரைவில் வெளியாகும். இப்படத்தில் தனுஷ் நடிப்பாரா இல்லை வேரு யாரும் நடிகரை வைத்து இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.