இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அகிலன்.
தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத கதைக்களங்களில் ஒன்று கடமும் அதை சார்ந்து சுற்றி உள்ள இடங்களும் காரணம் அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை கொண்ட படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. முழுமையாக துறைமுகம் படத்தில் காண்பிக்க முடியாது சில இடங்களில் மட்டுமே வந்து போகும் ஆனால் அதை எல்லாம் உடைத்து இந்த அகிலன் படத்தில் முழுமையாக துறைமுகத்தை பயன்படுத்தி இருக்கிறார் கல்யாணகிருஷ்ணன்.
சர்வதேச அளவில் கடல் வழியாகத்தான் பலவிதமான சட்ட விதோதச் செயல்கள் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட அந்த கும்பலுக்கு சென்னை துறைமுகத்தில் இருக்கும் ஒரு ஆளாக இருந்து பல சட்ட விரோத செயல்களை செய்து வருகிறார் ஹரிஷ் பெரடி. அவரிடம் அடியாள வேலை செய்பவர் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி ஹரிஷ் பெரடியை மீறி அந்த அதே தொழிலை தனியாக செய்து பெரியாளக வர நினைக்கிறார்.
அப்படி செய்து அந்த சர்வதேச கும்பலின் தலைவனான அருண் அரோராவை சந்திக்க ஆசைப்படுகிறார். ஒரு வழியாக சந்தித்து அந்த தலைவனின் கவனத்தை தன் வசம் ஈர்த்து அவனையும் சந்தித்து யாரிடம் அடியாளாக வேலை பார்த்தாரோ அந்த தலைவர் பதவியையும் வாங்கி விடுகிறார் ஜெயம் ரவி. இதன் பின்னர் தனியாக ஒரு கப்பலை வாங்கி அதன் மூலம் பொதுச் சேவை செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு தடையாக இருக்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிராக் ஜானி இதை தவிர அந்த கடத்தல் கும்பலின் தலைவனாக தருண் அரோரவும் ஜெயம் ரவிக்குச் சொந்தமான கப்பல் இயக்க விடாமல் சதி வேலைகளை செய்து தடுக்க பார்க்கிறார் இதன் பின்னர் ஜெயம் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
துறைமுகத்தில் பணி புரியும் அடியாள வரும் ஜெயம் ரவி கோபம், காதல், ஏமாற்றம், சோகம் என அனைத்து உணர்வுகளை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இவரின் வசன உச்சரிப்பு அவருக்கு மிக சிறப்பாக பொருந்தியுள்ளது. படம் முழுவதையும்தன் தோளில் சுமந்து முடிந்தவரை காப்பாற்றுக்கிறார்.
ஜெயம் ரவிக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் துறைமுக அதிகாரியா சிராக் ஜானி ஜெயம் ரவிக்கு பயங்கரமாக டப் கொடுத்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவியின் காதலியாகவும் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் கச்சிதமாக பொருந்தியுள்ளார். மேலும் ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிசந்திரன் என ரசிக்கும் படியான நடிப்பு.
கடல் சார்ந்த இடங்களில்தான் அதிக அளவில் சட்டவிரோத செயல்கள் நடக்கிறது என்பதை இந்த அளவு வெளிப்படையாக சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் அதை தைரியமாகவே சொல்லியுள்ளார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். மிகவும் சாதராமான ஒரு கதையை எடுத்து திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி நம்மை ரசிக்க வைக்கிறார். ஆனால் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் சுவாரசியமும் இரண்டாம் பாதியில் காணமல் போனது வருத்தம்.
துறைமுக காட்சிகளை காட்சிப்படுத்த ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் கடுமையாக உழைத்துள்ளார் என்பது படத்தின் ஒரு ஒரு காட்சியிலும் நம்மால் உணர முடியும். படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும்.
கடல் சார்ந்த இடங்களில்தான் அதிக அளவில் சட்டவிரோத செயல்கள் நடக்கிறது என்பதை இந்த அளவு வெளிப்படையாக சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் அதை தைரியமாகவே சொல்லியுள்ளார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்
Agilan Review By CineTime
[wp-review id=”45689″]