News
சூரி படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி !
நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
விலங்கு வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.