News

ஜகமே தந்திரம் படத்தில் நான் பேசிய தமிழை கிண்டல் செய்தனர் – ஐஸ்வர்யா லட்சுமி !

Published

on

விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் வரும் பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டு பெண் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திரையுல அணுபவம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில்:- ஜகமே தந்திரம் படத்தில் எனது காட்சிக்கான வசனத்தை நானே டப்பிங் பேசியது எனக்கு முழு திருப்தியை நிறைவை தந்தது. ஆனால் ஜகமே தந்திரம் படப்பிடிப்பின் போது நான் பேசிய தமிழ் வசனங்களை எனது நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் அம்மா தயவு செய்து தமிழை கொன்று விடாதே சகிக்கல என கிண்டல் செய்தனர்.

அதன் பின்னர் என்னுடைய தமிழில் உச்சரிக்கும் வார்த்தை பிரயோகங்களை மேம்படுத்திக் கொண்டேன். அதை பலரும் பாராட்டினர். அதேபோல் மணிரத்னம் சார் படமான பொன்னியின் செல்வனில் எனது காட்சிக்கான வசனங்களை நானே டப்பிங் செய்து கொள்ள அனுமதி கேட்டுருக்கிறேன். அப்படி நானே பேசி நடித்த அந்த காட்சி வெளியானால் உண்மையாகாவே அந்த கதாப்பாத்திரம் உயிரோட்டமானதாக இருக்கும் என சொல்லி இருக்கிறேன்.

தற்போது எனது நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்து வருகிறது. திரையுலகில் நான் புதுமுகம் என்றாலும் தற்போது எனது நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்து நடிப்பதில் எனக்கு மிகவும் அக்கறையுள்ளது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் எனக்கு அமைவதில் நான் மிகவும் லக்கி. ஜகமே தந்திரம் படத்தை பொறுத்தவரை இதில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் பெண்ணாக ஒரு பாடகியாக நடித்திருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மிக பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்துள்ளது என்று கூறினார்.

Trending

Exit mobile version