Connect with us
 

News

அஜித்துடன் ஜோடி சேரும் ஜஸ்வர்யா ராய் !

Published

on

அஜித் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படம் அஜித் நடிக்கும் 62-வது திரைப்படம். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில். இப்படத்தில் திரிஷா நடிக்கப்போவதாக ஒரு வதந்தி அடிபட்டது.

இந்த நிலையில் அஜித் ஜோடியாக நடிக்க நடிகை ஜஸ்வர்யாராயிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்திருந்தனர்.

இருந்தாலும் அஜித் நடிக்கும் 62-வது படத்தில் ஜஸ்வர்யா ராய் நடிப்பாரா இல்லையா என்ற அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.