News

தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் அஜித் 61 !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

வலிமை திரைப்படம் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிப்பு விடுத்ததையடுத்து திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது இயக்குநர் எச்.வினோத், அஜித் குமார் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார்கள். இதற்காக வேலைகள் ஹைதராபாத்தில் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படக்குவினர் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version