News
வலிமை படத்தின் அடுத்த அப்டேட் கொடுக்க தயாரான படக்குழு !

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 60-வது படமாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக சாதனை படைந்து வருகிறது. தற்போது வலிமை படத்தின் அடுத்த வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. அதன்படி வலிமை படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.