News

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வலிமை படக்குழு !

Published

on

அஜித் நடிப்பில் என்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்திற்காக அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இது வரை ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவராமல் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டி மைதானங்களில் அப்டேட் கேட்டு போராட்டம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அடிக்கடி வலிமை அப்டேட் கேட்டு அந்த ஹாஷ்டாக்கை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். சமீபத்தில் வெளியான தகவலின் படி இம்மாதம் 15 தேதிக்குள் வலிமை அப்டேட் வெளியாகலாம் என்று ரசிகர்கள் பெருதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வலிமை அப்டேட் அதவாது வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இன்னும் இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Trending

Exit mobile version