News

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது !

Published

on

வலிமை படத்திற்கு பின்னர் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இப்படத்தையும் போனி கபூர் அவர்களே தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது இதனை லைகா நிறுவனமே தற்போது உறுதி படுத்தியுள்ளது.

அஜித் 62-வது படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. 2023-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளது படக்குழு.

ராக்ஸ்டார் அனிருத் விவேகம் படத்திற்கு பின்னர் மீண்டும் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதையும் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version